• Apr 28 2024

"மைனா இப்படி கேக்குறாங்க.." – ரச்சிதாவின் கணவர் பரபரப்பு பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி உள்ளது. இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் உள்ளது.

பொம்மை டாஸ்க், அரசவை டாஸ்க், அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க், பழங்குடி வெர்சஸ் ஏலியன் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களிடையே நிறைய வலுவான போட்டிகளும் அவ்வபோது சண்டை சச்சரவுகளும்  நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருக்கின்றன.

முன்னதாக இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி பங்கேற்றனர்.


மேலும் இவர்களுள் ஜிபி முத்து முதலிலேயே சில காரணங்களால், வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி, பின்னர் அசல், ஷெரீனா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.  அண்மையில் குயின்ஸியும் வெளியேறி விட்டார். இதில் ரச்சிதா காப்பாற்றப்பட்டுள்ளார்.

விஜய் டிவி சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ரச்சிதா, பின்னர் நடிகர் தினேஷை திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் இருவரும் பின்னர் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.இவ்வாறுஇருக்கையில்  நடிகர் தினேஷ், வெளியில்  இருந்து ரச்சிதாவுக்கு தனது ஆதரவை நேரடியாக வெளிப்படுத்தி வருகிறார்,

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா குறித்து ஜனனி சொன்ன கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாற, இதுகுறித்து பேசியிருந்த தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இதுபோல் மேலும் பல இதயங்களை வென்றிடுங்கள். நீங்கள் விசுவாசமற்ற நண்பர்கள், தேவையற்றவைகளை எல்லாம் தவிர்த்து விட்டால் கடைசியில் வெற்றி பெறுவீர்கள். எல்லோரையும் போல உங்கள் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என தினேஷ் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் மணிகண்டனிடம் தனிமையில் பேசும் மைனா, “சரவணன் மீனாட்சி சீரியல் ஷூட்டிங்கின்போது இந்த ட்ரெஸ் போடக்கூடாது, அந்த தாவணி போடக்கூடாது என்றெல்லாம் ரக்ஷிதா ரெஸ்ட்ரிக்ட் பண்ணுவார்” என கூறியிருந்தார். இதேபோல் ஏலியன்- பழங்குடியினர் டாஸ்க்கில் ரக்ஷிதாவை உட்கார வைத்து நிறைய கேள்விகளை மைனா கேட்டிருந்தார்.


இவ்வாறுஇருக்கையில்  இதுகுறித்து ரச்சிதாவை குறிப்பிட்டு போஸ்ட் போட்டுள்ள நடிகர் தினேஷ், “10 வருடமாக நெருங்கிய நட்பில் உள்ளதாக சொல்லிவிட்டு, இப்படி வைத்து கேள்விகளை கேட்டபோதும், அமைதியாக இருந்திருக்கிறாய், எமோஷனாலாக உன்னை அட்டாக் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளாய். இதயங்களை வென்றுள்ளாய்.. அதை தொடரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்



Advertisement

Advertisement

Advertisement