• May 06 2024

பிரபல நடிகை திடீர் மரணம்... காரணம் இதுவா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பழம்பெரும் இந்தி நடிகைகளில் ஒருவர் ரஜீதா கோச்சார். இவர் 'பியா கா கர்' மற்றும் கங்கனா ரணாவத்தின் 'மணிகர்னிகா: தி குயின் ஆப் ஜான்சி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது கஹானி கர் கர் கி, தந்திரம், கவாச், ஹாதிம் உள்பட ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் பிரபலமானார். 


இந்நிலையில் ரஜீதா கோச்சாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அத்தோடு பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்டார். மேலும் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக கோளாறும் இருந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இருப்பினும் துரதிஷ்டவசமாக அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இவரின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரஜீதா கோச்சார் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. ரஜீதா கோச்சாரின் கணவர் ராஜேஷ் கோச்சாரும், மகள் கபிஷாவும் இங்கிலாந்தில் உள்ளனர். இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவர்கள் தற்போது இந்தியா திரும்பி உள்ளனர்.


இவரின் மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement