• May 10 2024

பாக்ஸ் ஆபிஸில் தனியாக மாஸ் காட்ட லோகேஷ் போட்ட பிளான்- லியோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததற்கு இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளது படக்குழு.

இந்நிலையில், லியோ டைட்டில் ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.


முன்னதாக விஜய்யின் லியோ திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்பட்டது. பொங்கலுக்கு வாரிசு வெளியானதைப் போல, தீபாவளிக்கு லியோ ரிலீஸாகும் என ரசிகர்களும் அதிக நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே ஆயுத பூஜைக்கு லியோ ரிலீஸாவது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது இந்நிலையில், தற்போது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது.


அக்டோபர் 19ம் தேதி புதன்கிழமை என்பதால் ஆயுத பூஜை விடுமுறையோடு மொத்தம் 6 நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் தனியாக மாஸ் காட்டலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம். காரணம் ரஜினியின் ஜெயஜலர் திரைப்படமும் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதால் ரோகெஷ் இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement