• May 29 2023

சம்யுக்தா விஷ்ணுவைப் பிரிவதற்கு இது தான் காரணமா?- முதன்முறையாக அவரே போட்ட பதிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  சீரியல்களில் ஒன்று 'சிப்பிக்குள் முத்து'. இதில் நடித்து பிரபலமானார் சம்யுக்தா. இவர் தன்னுடன் இந்த சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தில், பல சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி, ஒரு மாதமே ஆகும் நிலையில்இன்ஸ்டாகிராமில் இருந்து திடீர் என தங்களின் திருமண புகைப்படத்தை நீக்கியுள்ளதால், கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் மாறி மாறி தமது சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது சம்யுக்தா ஆண் மகன் என்றால் மரியாதை கொடுக்கிறவனாக இருக்கணுமே தவிர அதிகாரம் பண்ணுறவனாக இருக்கக் கூடாது எனப் பதிவினைப் போட்டுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ விஷ்ணு சம்யுக்தாவை மரியாதை இல்லாமல் நடத்தி இருக்கின்றார்.இதனால் தான் இருவரும் பிரிந்திருக்கின்றார்கள் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement