• Jun 03 2023

சிக்கனால் சிக்கலில் சிக்கிய ராஷ்மிகா... பணத்துக்காக இப்படியா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நேஷ்னல் கிரஷ் என பலராலும் சிறப்பாக அழைக்கப்படுவது உண்டு. அந்த அளவுக்கு உலகம் பூராகவும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. அதுமட்டுமல்லாது பல இளைஞர்களின் மனங்களில் கனவுக் கன்னியாகவும் இருந்து வருகின்றார்.


ராஷ்மிகா எந்தளவிற்குப் படங்களில் பிசியாக நடித்து வருகின்றாரோ அந்தளவிற்கு இவரிற்கு விளம்பர வாய்ப்புகளும் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த மெக் டொனால்ட்ஸ் விளம்பரம் மிகவும் வைரலானதோடு மட்டுமல்லாமல் தற்போது அவரை சர்ச்சையிலும் சிக்க வைத்துள்ளது. 


அதாவது மெக் டொனால்ட்ஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் பிரைடு சிக்கன் பர்கரை உணவுப் பிரியர்களுக்காக அறிமுகம் செய்தது. அந்த விளம்பரத்தில் நடித்த ராஷ்மிகா தற்போது நடிகர்களின் ட்ரோலிற்கும் ஆளாகி இருக்கின்றார். 


அதாவது ராஷ்மிகா, தான் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன் என்று பல நேர்காணல்களில் கூறி இருக்கிறார். அப்படி கூறிவிட்டு காசுக்காக அவர் அசைவ உணவுகளை விளம்பரம் செய்துள்ளதை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். அதாவது "காசுக்காக இப்படியா வாய்கூசாம பொய் சொல்லுவீங்க" என கேட்டு தாறுமாறாக விளாசி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement