• May 06 2024

விஜய்யின் நண்பர் சஞ்சீவின் குடும்பமா இது... புத்தாடையில் இப்படி ஜொலிக்கிறாங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் நெருங்கிய நண்பராக இருப்பவர் நடிகர் சஞ்சீவ். அதாவது சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்கிறது.


அந்த நட்பே விஜய்யின் புதிய கீதை, நிலாவே வா, பத்ரி, சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் சஞ்சீவை நடிக்க வைத்தது. அதுமட்டுமல்லாது 'மெட்டி ஒலி' சீரியலின் வாயிலாக சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி இருந்தார் சஞ்சீவ். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார்.

அத்தோடு பிக்பாஸ் சீசன் 5 இல் பங்குபற்றியதன் மூலம் தனது புகழை மென்மேலும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்திருக்கின்றார்.


இந்நிலையில் இன்றைய தினம் பல திரைப்பிரபலங்களும் தங்களுடைய தீபாவளிப் புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் தான் இருக்கின்றார்கள். அந்தவரிசையில் சஞ்சீவும் புத்தாடை அணிந்து தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருவதோடு அப்புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement