• May 19 2024

எந்திரன் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராயின் மகளா இது?- அம்மாவைப் போலவே வந்து விட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் உலக அழகி என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து பாலிவூட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர். இதனைத் தாண்டி தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

மேலும், தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு ஆராத்யா என்னும் ஒரு அழகிய மகள் உள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மகள், ஆராத்யாவின் லேட்டஸ்ட் வீடியோ வெளிவந்துள்ளது.

இந்த வீடியோ பார்த்த பலரும், ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement