• Jan 18 2025

சின்ன மருமகள் சீரியல் நடிகையா இது? முதல் என்ன என்ன செய்து இருக்கா தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நடிகை ஸ்வேதா, தமிழ்ச்செல்வி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் நவீன் குமார், ஸ்வேதா, சுந்தர் உட்பட பலர் நடித்து வருகின்றார்கள்.

சின்ன மருமகள் சீரியலின் கதைப்படி தமிழ்ச்செல்விக்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அவரை கதாநாயகன் ஒரு தலையாக காதலித்து கொண்டிருக்க அவருடைய பெற்றோர் கட்டாயத்தில் திருமணம் நடைபெறுகிறது.

ஏற்கனவே  ஸ்வேதா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சின்ன கேரக்டரில்  நடித்துள்ளார். அதன் பின்பு தற்போது சின்ன மருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் சின்ன மருமகள் சீரியல் நடிகை  ஸ்வேதா, சின்னத்திரைக்கு வருவதற்கு முன் யூடியூபில் பிரபலமானார் என்றும் அவரது யூடியூப் நண்பர்கள் தொடர்பிலும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, NRFM என்ற  யூடியூப் சேனலில் பார்ட் டைம்மாக தனது நபர்களுடன் வீடியோக்களை வெளியிட்டு உள்ளாராம். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement