• Jul 27 2024

மீண்டும் ஆரம்பிக்கும் நடிகர் சங்க கட்டட பணி! தொடக்கி வைத்தார் தலைவர்!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர்கள் , இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் என அனைத்து கலைஞர்களும் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் வெளியில் இருந்து வரும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் சங்கங்களை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கப்பட்டதே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகும்.  


தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் நடிகர்களையும் , நடிகைகளையும் உறுப்பினராகக் கொண்ட சங்க அமைப்பாகும். 1952இல் நிறுவப்பட்ட  இந்த அமைப்பு திரைப்படத்துறை தொடர்புடைய பிரச்சினைகளுக்காக பல நிகழ்வுகளை நடத்தி உள்ளனர். அண்மையில் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் அறப்போராட்டங்கள் நடத்தி உள்ளனர். 


இவ்வாறே இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக நடிகர் நாசர் உள்ளார். இந்த நிலையில் குறித்த சங்கத்திற்கென்று ஒரு கட்டடம் இல்லாமல் இருகிறது. அதன் பணிகள் கடந்த காலத்தில் ஆரம்பித்து சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதன் பணிகள் மீண்டும் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தலைவர் நாசர் தொடங்கி வைத்துடன் பொருளாளர் கார்த்தி ,துணைத்தலைவர் பூச்சிமுருகன் போன்றோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். 

Advertisement

Advertisement