• May 07 2024

அடடே நடிகை குஷ்பூவின் மகளா இது?- அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அழகில் ஜொலிக்கும் அவந்திகா

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் தான் குஷ்பூ.கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால், அவர் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

இதனிடையே அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது அடுத்தடுத்த பிசியான ஷெட்யூலிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பிட்னஸ் உள்ளிட்டவற்றிலும் கவனத்துடன் செயல்படுகிறார். குண்டாக காணப்பட்ட குஷ்பூ, தற்போது சிறப்பான டயட் மற்றும் வொர்க் அவுட்களால் ஸ்லிம்மாகியுள்ளார்.


தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த குஷ்பூ, ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்கிய இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வளர்ந்து பெரியவர்களாகியுள்ள நிலையில், இவர்களில் ஒருவர் நடிப்பிலும் மற்றவர் தயாரிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இதில் அவந்திகா சுந்தர், நடிப்பில் கவனம் செலுத்தவுள்ள நிலையில், அவர் அடுத்தடுத்த போஸ்ட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து இவரது க்யூட் புகைப்படங்களால் ரசிகர்கள் அதிகமாக கவரப்பட்டு வருகின்றனர். 




Advertisement

Advertisement

Advertisement