• May 06 2024

சாகுந்தலம் படத்துக்கு வந்த சோதனையா இது? கடும் அப்செட்டில் சமந்தா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர். இவரின் பிரிவிற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள தற்போதும் கூட ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

கணவரின் பிரிவிற்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் சரியாக தேர்வு செய்தார். அப்படி உருவாகி வருவதே 'சாகுந்தலம்' திரைப்படம், காளிதாசனின் பிரபலமான நாடகமான சகுந்தலாவை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை குணசேகர் இயக்கி வருகிறார்.

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இது, ரொம்பவே பிரமாண்டமாக இருக்கும் என டீசரிலேயே தெரிந்தது.

இவ்வாறுஇருக்கையில் , 'சாகுந்தலம்' படத்திற்காக சமந்தா ரொம்பவே ரிஸ்க் எடுத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் புராணக் கதையாக உருவாகுவதால், ஆக்சன் காட்சிகளில் சமந்தா படு மிரட்டலாக நடித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக சமந்தா எடுத்த ரிஸ்க்கை பார்த்து படக்குழுவினரே மிரண்டு விட்டார்களாம். இதனால் இந்தப் படம் தனக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுக்கும் என சமந்தா எதிர்பார்த்திருந்தார்.

அத்தோடு சமந்தாவுடன் அதித்தி பாலன், மோகன் பாபு ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இந்நிலையில், 'சாகுந்தலம்' படத்தை பார்த்த சமந்தா, மேக்கிங் சொதப்பிவிட்டதாகவும், இதனால் ரிஸ்க் எடுத்து நடித்ததெல்லாம் வேஸ்டாகிவிட்டதே என ஏமாற்றத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை நடந்து வருவதாகவும், கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால், சமந்தாவின் அதிருப்தி குறித்த செய்திகளெல்லாம் வதந்தி எனவும் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சீக்கிரமே தரமான அப்டேட்டுடன் திரும்பி வர்றோம் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சமந்தாவின் ரசிகர்கள் இப்போதைக்கு கூல் ஆகியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement