• May 12 2024

பவன் கல்யாணின் 52 வது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு பரிசா? வெளிவந்த '' OG '' டீசர் இதோ!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

ரசிகர்களிடையே  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பவன் கல்யாணின்  'OG' டீசர் தற்போது  வெளியானது.

 தயாரிப்பாளர் சுஜீத் மற்றும் பவன் கல்யாண் கூட்டணி டீசர் தொடர்பில்  அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர் அந்தவகையில் பவன் கல்யாண் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று  நிறைவேறியது .


டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சுஜீத் இயக்கத்தில் உருவாகி  வரும் படம் 'ஓஜி'. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. பவர்ஸ்டார் பவன் கல்யாணின் தீவிர நடிப்பு , சூப்பர் ஸ்டைலாகவும் பவர்ஃபுல்லாகவும் காணப்பட்டார். துப்பாக்கியுடன் அவர் என்ட்ரி ஷாட் செய்வது டீசரின் ஹைலைட். மற்றும் இரண்டாவதாக, சுஜீத்தின் உருவாக்கம் மற்றும் கதை என இரண்டு காரணங்களுக்காக இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து பெரும் எதிர்பார்ப்புகளை  உருவாக்கியுள்ளது .


பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் இன்று செப்டம்பர் 2 ஆம் தேதி தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு நாளில் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் ஆக இருக்கும்  படமான 'OG' டீசரை ரசிகர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.


 "OG இன் முதல் பார்வை பவன் கல்யாண் உண்மையான OG என்பதை நிரூபிக்கிறது. டீசர் வெளியாகி சிறிது நேரத்தில் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெறித்தனமாக பகிர்ந்துகொண்டு இருக்கின்றனர் . சுஜீத் தயாரிக்கும் “OG” 2024 இல் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது .


Advertisement

Advertisement

Advertisement