• Apr 16 2026

GOAT பட ஹெலிகாப்டருக்கு பின் இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா? வெளியான தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

லியோ படத்தில் விஜய் நடிக்கும் போதே விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையவிருக்கிறார்கள் என அட்டகாசமான அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்துக்கு புழுயுவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புழுயுவு வார்த்தையை படத்தின் பெயராக வைத்தது ரொம்பவே புதுமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புழுயுவு படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டர்களில் விஜய் படு யங்காக இருந்தார்.


படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் இலங்கையில் நடக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

சமீபத்தில் வெளியான போஸ்டர்களில் ஒரு போஸ்டரில் ஹெலிகாப்டர் ஒன்று இருந்தது. தற்போது அந்த ஹெலிகாப்டரின் பின்னணியில் இருக்கும் சீக்ரெட் குறித்து படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தெரிவித்திருக்கிறார்.


இதுவரைக்கும் 5 முதல் 6 ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டிருக்கின்றன. 

பொங்கல் பண்டிகை அன்று வெளியான போஸ்டரின் பின்னணியில் இருக்கும் ஹெலிகாப்டர் மற்றும் வெடிகுண்டு வெடிப்பது போன்று இருப்பது போஸ்டருக்காக உருவாக்கப்பட்டது இல்லை. அந்தக் காட்சி ஒரு பின்னணி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


Advertisement

Advertisement