• Feb 23 2025

நடிகர் அஜித்தின் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகின்றாரா? வெளியான மாஸ் அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித், இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார்.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில், நடிகர் அஜித்தின் படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இயக்குநர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 3 மற்றும் சலார் 2 படங்களை மட்டுமே இப்போதைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தென்னிந்தியாவில் மற்ற எந்தவொரு முன்னணி நடிகர் படத்தையும் இயக்க அவர் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தை முடித்து விட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது மட்டுமே தற்போது உறுதியான தகவலாக இருக்கிறது.


Advertisement

Advertisement