• May 12 2024

Ak-61 படத்தின் படப்பிடிப்பு இத்தனை சதவீதம் முடிந்து விட்டதா?- படத்தின் கதை இது தானாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனைத் தொடர்ந்து AK61 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார், இப்படத்தை அஜித்தை வைத்து வலிமை, நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்,வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கின்றார்.

இந்த படம் வங்கியில் பணம் கொள்ளையடிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறதாம். படத்தில் அஜித் மங்காத்தா பாணியில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எத்தனை சதவீதம் முடிந்துள்ளது. என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி , 30% முடிந்துள்ளதாம். படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement