• Oct 06 2026

5 நாட்களிலேயே தரமான சம்பவம்.. விஜய் சேதுபதியின் ‘பத்தா’ பட வசூல் நிலவரத்தை பார்த்தீங்களா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பத்தா’ திரைப்படத்தின் 5 நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சினி 1 ஸ்டூடியோ, A for Apple ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லிஜோமோல் ஜோஸ், சாய், சஹஸ்ர ஸ்ரீ, சாண்டி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவை காட்சிகள், உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘பத்தா’ திரைப்படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில், அதன் உலகளாவிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில் உலகளவில் ரூ.14 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்தால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement