• May 04 2024

வாரிசு இசை வெளியீட்டு விழா தொகுப்பாளர் பிக்பாஸ் பிரபலமா..? உறுதியாக வெளிவந்த தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைபடம் தான் வாரிசு.இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.அத்தோடு இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



இப் படம் திரைக்கு வர இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கிறது என்பதால் ப்ரோமோஷனை முழு வீச்சில் தொடங்க இருக்கின்றனர். வாரிசுக்கு அதிக தியேட்டர் ஒதுக்குவது பற்றி உதயநிதியை சந்திக்க இருப்பதாக தயாரிப்பார்கள் தில் ராஜு தெரிவித்து இருந்தார்.

ஆனால் வாரிசு தமிழ்நாட்டில் முக்கிய பகுதிகளின் உரிமையை உதயநிதி தான் பெற்று இருக்கிறார். அதனால் அந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடத்த இருக்கின்றனர். அத்தோடு வரும் டிசம்பர் 24ம் தேதி மாலை விழா நடைபெற இருக்கிறது.

அதை விஜய் டிவி பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.மேலும் அந்த தகவலை அவரே ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். 



Advertisement

Advertisement

Advertisement