• May 10 2024

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் 8 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஏராளமான நடிகர் கூட்டத்தைக் கொண்ட முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. இவ்வாறு சினிமாவில் ஒரு காமெடியனாக அறிமுகமான இவர் தற்போது ஹீரோவாகவும் அசத்தி வருகின்றார். 

இவருடைய படத்தில் பேசிய அனைத்து காமெடி வசனங்களும் தற்போது வரை மக்கள் மனதில் இருந்து வருகிறது.


வடிவேலு கதாநாயகனாக நடித்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வெளியானது. மேலும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.

அத்தோடு இப் படத்தில் குக் வித் கோமாளி புகழ், ஷிவாங்கி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.


நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இவ்வாறுஇருக்கையில், 8 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ 7.70 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகிவுள்ளது.


இருப்பினும் தயாரிப்பு நிறுவனமான லைகா இதுவரை வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.


Advertisement

Advertisement

Advertisement