• Apr 27 2024

நடிகர் ஆர்யா வாங்கிய சைக்கிளின் விலை இத்தனை லட்சமா?-இதில் இத்தனை கிலோ மீட்டர் பயணித்தாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் முக்கிய நடிகர் தான் ஆர்யா. இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.

அந்த வகையில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் சார்பாட்டா பரம்பரை திரைப்படம். இத்திரைப்படமானது வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அள்ளிக் குவித்தது. இப்படத்திற்காக கமல்ஹாசன் கூட பாராட்டி இருந்தார்.

இதையடுத்து, அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஆர்யா, தினமும் ஜிம்முக்கு செல்வது மட்டுமின்றி, சைக்கிளிங் சென்று வருகிறார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் அவ்வப்போது, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிடுகிறார்.

சைக்கிள் விரும்பியான அவர், விலையுயர்ந்த சைக்கிள்களை தன் பயிற்சிக்கு பயன்படுத்துகிறார். அந்த வகையில் தற்போது அவர், ஜயன்ட் டெபி என்ற சைக்கிளை வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். இன்று இந்த சைக்கிளில் அவர் 50 கிமீ பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement