• Apr 27 2024

இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக புஃஸ்அப் செய்யும் கமல்ஹாசன்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன் . இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை இவரது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

மேலும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதிஇ பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர் . இப்படத்தின் வெற்றியினால் படக்குழுவினருக்கு கமல் பரிசுப் பொருட்களையும் வழங்கியிருந்தார்.

அதிலும் சூர்யாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய ரோலக்ஸ் மணிக்கூடை வழங்கினார். இது குறித்த புகைப்படங்களும் வீடியோவும் வைரலாகி இருந்தது. இப்படத்தினன் வெற்றிக்காக பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/Dir_Lokesh/status/1541770534454960129

இப்படத்தின் தொடர்ச்சியாக இன்னும் இரு பாகங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது லோகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் புஃஸ்அப் செய்யும் வீடியாவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement