• May 07 2024

வாரிசு படத்தில் எஸ்.ஜே சூர்யா இப்படியொரு கதாப்பாத்திரத்தில் தான் நடிக்கின்றாரா?- ஓபனாகப் பேசிய பிக்பாஸ் பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் கதாநாயகனாக விஜய் நடித்து வருவதோடு தெலுங்கு இயக்குநரான வம்சி இப்படத்தை இயக்கி வருகின்றார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின.அத்தோடு இப்படத்திலிருந்து ஏற்கனவே ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.


இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதோடு அதன் இறுதிக்கட்டத்தையும் எட்டியுள்ளது..


இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்  பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாரிசு படத்தின் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் "நடிகர் எஸ்‌. ஜே. சூர்யா, இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்" என கணேஷ் வெங்கட்ராமன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement