• May 05 2024

லியோ படத்தில் கமல்ஹாசன் இருக்கின்றாரா?- சஸ்பென்ஸ் வைத்து ஓபனாகப் பேசிய லோகேஷ் கனகராஜ்

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் லியோ. விஜய்யின் 67வது படமான இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகவுள்ளது.

மேலும் இந்த படம் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றும் கூறி வருகின்றனர். ,இந்த நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,இன்னும் 10 நாள் தான் இருக்கு அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க, இந்த படம் எல்சியூ வா அல்லது ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸா இல்லை வேற படமா என்பது தியேட்டரில் வந்து பார்க்கும்போது நிச்சயம் தெரியவரும் எனக்கு கூறியுள்ளார்.


மேலும், கமல்ஹாசன் லியோ படத்தின் டப்பிங் நடக்கும் போது அதே ஸ்டுடியோவில் இருந்தார் என்கிற தகவல் வந்ததே அது ரூமரா? உண்மையா? கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், கமல் சார் இருந்தது உண்மைதான். சொல்லப்போனால் அவர் எங்கே போனாலும் அங்கே இருப்பார். நாங்க இப்ப சமீபத்தில் லியோ படத்தின் சென்சார்க்கு சென்றிருந்தோம் அங்கேயும் கமல் சார் வந்திருந்தார். 


ஆனால், லியோவில் அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள் எனக்கூறி கடைசிவரை சஸ்பென்சை மெயின்டைன் செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.


ஆனால், எல்சியூ இல்லை என்பதையும் கமல் நடிக்கவில்லை என்பதையும் லோகேஷ் கனகராஜ் மறுக்கவில்லை . அப்போ ஏதோ ஒரு சஸ்பென்ஸ் நிச்சயம் இருக்கும் என்றும் கண்டிப்பாக கிளைமேக்ஸில் எல்சியூ கனெக்ட் இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement