• Mar 13 2026

அண்ணாமலையின் உயிருக்கு எமனான மீனா.. ஜோசியக்காரி சொன்னது நிஜமா.?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. இல்லத்தரசிகள் மட்டுமின்றி பல வயதினரும் இந்த சீரியலுக்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

வாராவாரம் இந்த சீரியலில் புதிய புதிய திருப்பங்களும் சர்ச்சைகளும் ஒளிபரப்பாகி ரசிகர்களின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த வாரம் என்ன நடக்க உள்ளது என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

தற்போது வெளியான ப்ரோமோவில், அண்ணாமலையும் அவரது நண்பரும் வீதியால் வந்து கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த ஒருவர் அவரை இடித்து விட்டு செல்கிறார். இதனால் அண்ணாமலை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு காலில் சிறிய முறிவு இருப்பதாக மருத்துவர் தெரிவிக்கிறார்.


இதை கேட்டு விஜயா அழுது புலம்புவதோடு, அங்கு நின்ற மீனாவை பார்த்து “இது எல்லாம் உன்னால்தான். நீ தான் என் கணவரின் உயிரை வாங்க வந்த எமன்” என்று திட்டுகிறார். மேலும், ஜோசியக்கார அம்மா சொன்னது போலவே நடந்துவிட்டது என புலம்புகிறார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீனா மனம் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். இதுவே தற்போது வெளியான ப்ரோமோவின் காட்சி.

ஏற்கனவே, விஜயாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிந்தாமணி, வீட்டு பத்திரத்தில் அவருக்குத் தெரியாமல் கையெழுத்து வாங்குகிறார். மேலும், மீனா மற்றும் முத்து அந்த வீட்டில் இருக்கக் கூடாது என ஜோசியக்காரியை வைத்து நாடகம் ஆடுகிறார்.

தற்போது அவர் போட்ட மாஸ்டர் பிளான் படியே அண்ணாமலைக்கு விபத்து ஏற்பட்டு, மீனா வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இனிவரும் எபிசோடுகளில் விஜயா உண்மையை உணருவாரா? அல்லது சிந்தாமணியின் திட்டத்தை முத்து முறியடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement