• Oct 16 2024

கீர்த்தி சுரேஷும் அனிரூத்தும் காதலிப்பது உண்மை தானா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இர் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.இதைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களை தன் கைவம் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் குறித்து அடிக்கடி திருமண வதந்திகளும் பரவி வருவதுண்டு.அண்மையில் கூட அவர் துபாயை சேர்ந்த தனது நண்பருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டபோது அவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலன் என்று தகவல் பரவியது. பின்னர் அது வெறும் வதந்தி என கீர்த்தியே சொன்ன பின்னர் தான் உறுதியானது. 


இதனை அடுத்து இசையமைப்பாளர் அனிரூத்தைக் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தது.ஆனால் இதுவும் வதந்தி என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது இவர்கள் மீண்டும் காதலிப்பதாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்து அடிக்கடி காதல் வதந்தி பரவியதால், ஒருவேளை உண்மையாக இருக்குமோ என சோசியல் மீடியாக்களிலும் பேச்சு அடிபட தொடங்கி இருந்தது.


 அதற்கு அப்படியே முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் மேனன், இதுவும் வதந்தி தான் என உறுதி படுத்தி இருக்கிறார். கீர்த்தியும் அனிருத்தும் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement