• May 03 2024

வீட்டுக்குள் புகுந்து பாக்கியாவின் லைசன்சைத் திருடிய கோபி- குழப்பத்தில் இருக்கும் ஈஸ்வரி- பாக்கியா எடுத்த முடிவு- Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா லைசன்சைக் காணவில்லை வீட்டில இருக்கிறதா என்று பார்ப்பீங்களா என்று சொன்னதும் ராமமூர்த்தி அமிர்தாவைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு போகின்றார். இதைப் பார்த்த கோபி ஏதோ பிரச்சினை இருக்கு என்று இனியாவிடம் போன் பண்ணிக் கேட்க, இனியா ஆக்ஸ்சிடென்ட் ஆன விஷயத்தைச் சொல்கின்றார்.


அப்போது கடுப்பான கோபி ஈஸ்வரியிடம் போனைக் கொடுக்கச் சொல்கின்றார். ஈஸ்வரியிடம் பேசும் போது ஈஸ்வரி லைசன்ஸ் வீட்டில இருக்கு அதை எடுக்க உங்க அப்பா போறாரு,அவர் கொண்டு வந்தால் சரி ஆகிடும் என்கின்றார். அந்த நேரத்தில் கோபி நான் ஒரு வண்டி அனுப்பி வைக்கிறேன். இனியாவும் நீங்களும் வந்திடுங்க என்கின்றார்.

தொடர்ந்து கோபி வண்டியை எடுத்துக் கொண்டு பாக்கியா வீட்டுக்குச் செல்கின்றார். அப்போது ராதிகா போன் பண்ணி எங்க இருக்கிறீங்க என்று கேட்க,அங்க தன் வந்து கொண்டிருந்தேன். ஆனால் ஆபிஸில் சின்ன வேலை அதான் கிளம்பிப் போறேன் என்று சொல்கின்றார். பின்னர் பாக்கியா செலவுக்கு காசு இருக்கா என்று தன்னைக் கேட்டு அவமானப்படுத்தியதை நினைத்து பார்க்கின்றார்.


தொடர்ந்து பாக்கியா வீட்டில் யாரும் இல்லாததால் தான் வைத்திருக்கும் திறப்பைக் கொண்டு பாக்கியாவின் ரூமைத் திறந்து பாக்கியாவின் லைசன்சை திருடிக் கொண்டு போகின்றார். கோபி போன பிறகு அமிர்தா ரூமுக்குள் சென்று லைசன்சைத் தேடிப் பார்க்கின்றார். ஆனால் எங்கு தேடியும் லைசன்சை காணவில்லை.

இதனால் அமிர்தா லைசன்சைக் காணவில்லை என்று சொல்ல, பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். மறுபுறம் கோபி அனுப்பி வைத்த வண்டி இனியாவையும் ஈஸ்வரியையும் கூட்டிட்டு போக வந்து நிற்கின்றது.இதனால் பாக்கியா ஈஸ்வரியையும் இனியாவையும் அந்த வண்டில வீட்டுக்குப் போகச் சொல்கின்றார்.


மறுபுறம் பாக்கியாவை ஜெயிலில் அடைக்கப்போறாங்க என்ற சந்தோஷத்தில் நடந்த விஷயங்களை கோபி தன்னுடைய நண்பனுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றார்.அப்போது அங்கு பழனிச்சாமி வருகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement