• May 03 2024

'கோப்ரா' படத்தின் நீளம் குறைப்பு... இப்படி ஒரு விமர்சனம் எழுந்தமை தான் காரணமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சியான் விக்ரம். இவர் தன்னுடைய நடிப்புத் திறமையினால் இன்றுவரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் மின்று நிலைத்திருக்கின்றார். இவரின் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். 

அந்தவகையில் தற்போது சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கோப்ரா'. இப்படத்தினை டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய இரு வேறு ஜானர் படங்களை கொடுத்த தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கின்றார்.


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முன்னதாக வெளியான இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்ததால் 'கோப்ரா' படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. மேலும் இந்தப் படத்தின் கதாநாயகன் விக்ரம் என்பதும் மேலும் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியது. 

அந்தவகையில் 2019-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படமானது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் படப்பிடிப்பிலிருந்து சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இப்படத்தில் விக்ரம் சுமார் ஏழு வேடங்களில் நடித்துள்ளார். 

சமீபகாலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட விக்ரம் 'கோப்ரா' பட ப்ரமோஷன்காக தானே நேரடியாக இறங்கி பணிகளை ஆரம்பித்திருந்தார். இதற்காக இந்தியாவிலேயே உள்நாட்டு பயணத்தை படத்தின் நாயகி ஸ்ரீநிதி செட்டியுடன் இணைந்து மேற்கொண்டு வந்தனர்.


இப்படமானது தமிழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதில் விக்ரமின் நடிப்பு பலத்த பாராட்டுகளை பெற்ற போதிலும் படத்தில் தேவையான சுவாரஸ்யம் இல்லை என்கின்ற மோசமான விமர்சனங்களும் இப்படம் பெற்று வந்துள்ளன.  

இவ்வாறாக கலவையான பல விமர்சனங்களையும் பெற்று வருகின்ற இந்த படமானது வெளியான முதல் நாளிலேயே டெலிகிராம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சுமார் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 

அதுமட்டுமல்லாது இந்த படத்திற்கு யு / ஏ  சான்றிதழ் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு 3 மணி நேரம் 3 நிமிடம் 3 செகண்ட் என இந்த படத்தின் ரன்னிங் டைமும்  முன்பே வெளியாகியிருந்தது. தற்போது இந்தப் படம் பற்றிய மற்றுமொரு விமர்சனமாக 'படம் மிக நீளம்' என்ற விமர்சனம் எழுந்தது. அத்தோடு மிக நீளமாக இருப்பதால் படத்தில் சுவாரஸ்யம் குறைவதாகவும் ஒரு சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. 

இவ்வாறான விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற படக்குழுவினர் தற்போது இந்தப் படத்தின் நீளத்தை குறைக்க முடிவு எடுத்துள்ளனராம். அந்தவகையில் இந்த படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றினை விடுத்திருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement