• Dec 07 2024

ஏன் தொட்ட..?? உனக்கு கொஞ்சமும் மேனஸ் இல்லையா? சௌந்தர்யாவுக்கு விழுந்த செருப்படி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் வீட்டுக்குள் ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்  அனுப்பப்பட்ட பிறகு ஆட்டம் சூடு பிடித்துள்ளது.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

d_i_a

இதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி வெளியே சென்றார்கள். அதன் பின்பு  ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.


இந்த நிலையில், நேற்றைய எபிசோட் இல் பிக் பாஸ் வீட்டில் உள்ள சௌந்தர்யா, ஜெப்ரி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் நகை விளையாட்டை விளையாடி கொண்டுள்ளார்கள். அதன் போது பிங்க் நிறத்தை தொட வேண்டும் என சௌந்தர்யா வேகமாக ஓடிச் சென்று அங்கு இருந்த தீபக்கின் சட்டையை தொடுகின்றார். அதில் பிங்க் நிற எழுத்துக்களை தான் சௌந்தர்யா தொட்டுள்ளார்.

ஆனால் இதை பார்த்து கோபம் அடைந்த தீபக் சௌந்தர்யாவை சரமாரியாக திட்டியுள்ளார். என்னுடைய பெர்மிஷன் இல்லாமல் எப்படி என்னைத் தொடுவா? உனக்கு மேனஸ் இல்லையா? என சௌந்தர்யாவை திட்டி தீர்த்துள்ளார். இதை கேட்டு சௌந்தர்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement