• May 07 2024

நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?- வியந்து போன ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் ஹீரோவாக நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 25ம் தேதி வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான பதானுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் 900 கோடி ரூபாய் வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான சாதனை படைத்துள்ளது.சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படமானது ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.


இப்படத்தின் வெற்றியை தொடர்ந்துஅடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்றுகொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தாய் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதன்படி ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 6000 கோடி என தெரிவிக்கின்றனர். இவர் ஆண்டுக்கு ரூ. 240 கோடிக்கும் மேல் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement