• May 25 2026

இந்திய இசைக்குயில் மௌனமானது! - 92 வயதில் பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..

shali / 1 month ago

Advertisement

Listen News!

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகியது. 92 வயதான இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டு, தென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.


இந்நிலையில், ஆஷா போஸ்லே மறைந்தார் என்ற செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. 

இந்திய இசைத்துறையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றவர் ஆஷா போஸ்லே. பல தசாப்தங்களாக தனது குரலால் ரசிகர்களை கவர்ந்த இவர், 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல்கள் பல தலைமுறைகளுக்கும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன.

இவரது மறைவு ஒட்டுமொத்த திரைஉலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Advertisement