• Apr 30 2024

“உண்மையில் எனக்கு ஃபீல் ஆகிவிட்டது என் Song முழுசா வர்ல- மனம் திறந்த ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லெஷ்மி!

stella / 1 year ago

Advertisement

Listen News!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. 

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிய ஆபத்துதவிகளை தூண்டிவிட்டு, ஆதித்த கரிகாலன் மீதான தன் பழைய வஞ்சத்தை தீர்த்துகொள்ள நந்தினி செய்யும் சூழ்ச்சியும் அதனால் சோழ அரியணைக்கு வரும் ஆபத்தும், இதை எதிர்கொள்ள, தான் விரும்பும் வந்தியத்தேவன் மூலம் இலங்கையில் உள்ள தன் சகோதரனும் பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனுக்கு செய்தி அனுப்புகிறார் சோழ இளவரசி குந்தவை.


நந்தினியின் சூழ்ச்சி எப்படி சோழர்களால் முறியடிக்கப்படுகிறது? நந்தினி திருந்தினாரா? ஆதித்த கரிகாலன் என்ன ஆகிறார்? ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்குமான பிரச்சனைக்கு பின்னணி தெளிவானதா? என்பதை நோக்கி இப்படத்தின் 2-ஆம் பாக கதை பயணிக்கிறது.


இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், பூங்குழலி படகு ஓட்டும் போது வரும் பாடல் மிக குறைந்த நேரமே ஓடுகிறது. இது குறித்து உங்களுக்கு வருத்தம் இருந்ததா? என்று ஐஸ்வர்யா லெஷ்மியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா  லெஷ்மி, “உண்மையில் எனக்கு ஃபீல் ஆகிவிட்டது. ஆனால் இலங்கை வந்துவிட்டது என்று சொல்லி சார் மணி சார் அந்த பாடலை அங்கேயே நிறுத்திவிட்டார். 

நான் கேட்க வேண்டிய என் மனதில் இருந்த கேள்வியை அந்த நிருபர் கேட்டு விட்டார் (விளையாட்டாக சொல்கிறார்). ஒரு நடிகையாக எனக்கு அந்த பாடல் இப்படி ஒரு படத்தில் மிகவும் பிடித்தது, எனவே தியேட்டரில் படம் பார்க்கும்போது அந்த பாடல் முழுமையாக வராதது எனக்கு வருத்தத்தை அளித்தது தான். 


ஆனால் அதே சமயம் படம் போகக்கூடிய ஓட்டத்தில் அந்த பாடல் படத்தை தொய்வடையச் செய்யும் என்பதை நான் உணர்கிறேன் என்பதால் அந்த இடத்தில் அது சரியான முடிவு தான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதையே மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்!” என்று விளக்கம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement