• May 09 2024

யானை போல் நான் இருக்கிறேன் அது மட்டும் நடவாது- உருவக்கேலி செய்யாதீங்க- கடும் கோபத்தில் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஜோடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மகாலட்சுமி தனது கணவர் ரவீந்திரனை உருவக்கேலி செய்யாதீர்கள் என பதிவிட்ட விடயம் தற்பொழுது சோஷியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வருவதைக் காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் அதிகமாக வில்லி கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் தான் விஜே மகாலட்சுமி. இவர் ஏற்கனவே திருமணம் செய்து ஒரு ஆண்குழந்தை பிறந்திருந்தது. இதனை அடுத்து திடீரென தனது முதற்கணவனை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.


இதனை அடுத்து சில சில நாட்களுக்கு முதல் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.உடல் எடை கூடி காணப்படும் ரவீந்திரனை இவர் திருமணம் செய்தது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக அமைந்துள்ளது.

இதனால் பல்வேறு சேனல்களுக்கும் பேட்டி அளித்து தமது காதல் விடயங்களைக் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் பிரபலம் ஒருவர் இவர்களது திருமணம் குறித்து கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார்.இந்த சூழலில் மஹாலட்சுமி மற்றும் ரவீந்திரன் இருவரும் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

அதில் தனது கணவரின் உருவம் குறித்து யாரும் கேலி செய்ய வேண்டாம். உங்களுடைய உறவுகள் இதுபோன்று இருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா என உருக்கமாக கூறியுள்ளார்.அத்தோடு வாழ்ந்து காட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


அதேபோல தனது மனைவியான மகாலட்சுமியை யாரும் அழவைக்க இயலாது. இது எங்களுடைய வாழ்க்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களைப் பற்றி யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. இனிமேலாவது இதுபோன்று கமெண்ட்களை செய்யாமல் இருங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள்  அம்மா, அக்கா போன்றோரை அழைத்து அந்த கமெண்ட்களை படிக்க சொல்லுங்கள். அவர்களுக்கு எவ்வாறான உணர்வு இருக்குமோ அதே உணர்வு தான் எங்களுக்கும் இருக்கும்.

 மகாலட்சுமிக்கு முன்னால் யானை போல் நான் இருக்கிறேன் அவளை என்னை தாண்டி தான் அழ வைக்க இயலும். மிக விரைவில் நான் மகாலட்சுமிக்காக உடல் எடையை குறைத்துக் கொள்வேன். எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது நாங்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வோம் எங்களைப் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை என ரவீந்திரனும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement