• May 08 2024

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென விசிட்டடித்த நடிகர் ஷாருகான்- இது என்ன புது சம்பவமாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் ஷாருகான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களாக விளங்கும் ரஜினிகாந்த நடிப்பில் ஜெயிலர் என்னும் திரைப்படமும் ஷாருகான் நடிப்பில் ஜவான் என்னும் திரைப்படமும் உருவாகி வருகின்றது. இப்படங்களில் வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

அதன்படி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர்  ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இதேபோல், அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் புதிய படம் ஜவான். பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்தது.

 ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரிகான் இப்படத்தை தயாரிக்கிறார்.இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னை ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் இந்த படிப்பில் கலந்துகொண்ட  ஷாருக் கான்,அதே ஸ்டூடியோவில் நடக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுள்ளனர். 

அங்கு ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியுள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்தியேக தகவல்கள் கிடைத்துள்ளன.


சென்னை ECR- இல் இருக்கக்கூடிய முன்னணி ஸ்டூயோவான, ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய திரைப்படம், சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ ஆகிய திரைப்படங்களும் படமாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement