• Jun 18 2024

'நான் இரு பாலின தன்மை கொண்டவர்'- வெளிப்படையாக தனது ரகசியத்தைக் கூறிய பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

The Married Woman என்ற வெப் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை மோனிகா டோக்ரா. இந்த சீரியலை இயக்குநர் சாஹிர் ரஸா இயக்கியிருந்தார். இந்த நிலையில் மோனிகா அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

அதில் அவர் நான் இரு பாலின தன்மை கொண்டவர் என வெளிப்படையாகக் கூறியுள்ளார் இது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சொந்தமாக ஏகப்பட்ட ஆல்பம் பாடல்களை வெளியிட்டு தனது கருத்துக்களை எடுத்து உரைத்து வரும் இவர் ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகமான LGBT சமூகத்தினருக்கு தனது ஆதரவு குரலை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

கே, லெஸ்பியன் என ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், Pan Sexual என்பது அவர்கள் பெண்ணாகவே இருப்பார்கள். ஆனால், அவர்களுக்குள் பெண் தன்மையும், ஆண் தன்மையும் மாற்றி மாற்றி அதிகரித்து காணப்படும் ஒரு வித குழப்பான நிலை தான். இதுவும் இயற்கையின் ஒரு வித்தியாசமான இயல்பு தன்மை தான் என்பதை சமீப காலமாக பலரும் உணர்ந்து வருகின்றனர். 6 ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் தனக்கு Pan Sexual என்கிற ஒரு வார்த்தையே அறிமுகமானது என்றும், பின்னர், தனக்கு அது தான் செட்டாகும் என்பதையும் புரிந்து கொண்டதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

குழந்தை பருவமாக இருந்த போதே ஏகப்பட்ட பாலியல் சீண்டலுக்கு நான் ஆளானேன். உறவினர்கள் நான் உறங்கும் போது எனக்கு பாலியல் ரீதியாக பல தொல்லைகளை கொடுத்துள்ளனர். நான் ஒரு டாம் பாயாகத் தான் வளர்ந்தேன். ஆரம்பத்தில் நான் ஒரு ஆண் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், எனக்கு மார்பகங்கள் வளர ஆரம்பித்ததும் என் வாழ்க்கையே போய் விட்டதாக வேதனைப்பட்டேன் என மனம் நொந்து பேசியுள்ளார்.

என் பெற்றோர்கள் என்னை கட்டாயப்படுத்தி ஒருத்தருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். மீடியா மற்றும் பொதுவெளியில் எனக்கு திருமணம் ஆனதையே முற்றிலுமாக மறைத்து விட்டேன். என்னை திருமணம் செய்து கொண்டவரை என் உடல் நிலையை எடுத்து சொன்னேன். அவர் உண்மையிலேயே புரிந்து கொண்டார். அதன் காரணமாகவே அவர் மீது மேலும், காதல் வளர்ந்தது. ஆனால், திருமண வாழ்க்கைக்கு நான் செட் ஆக மாட்டேன் என்பதை உணர்ந்து இருவரும் பிரிந்து விட்டோம் என்றும் கூறியுள்ளார்.

பாலிவுட் பிரபலம் மோனிகா டோக்ராவின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், போல்டாக தனது நிலைப்பாட்டை ஒளிவு மறைவின்றி சொன்னதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement