• Jun 18 2024

'அந்த காதல் கையில் இருந்திருந்தால் டென்னிஸ் விளையாட்டு வீரனாகி இருப்பேன்'- காதல் உருக்கத்தில் பேசிய பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவராக விளங்குபவர் தான் அமீர்கான். இவர் நடிப்பில் வெளியாகிய ரங்கீலா, இஷ்க், லகான், ஃபனா, கஜினி, த்ரீ இடியட்ஸ், PK, தங்கல் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்துள்ளது.

மேலும் இவரது நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியாகிய லகான், சிறந்த வேற்று மொழி திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதும் முக்கியமாகும். அதே போல 2016ம் ஆண்டு வெளியான தங்கல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, லால் சிங் சத்தா என்னும் திரைப்படம் ஆகஸ்ட் 11ந் தேதி வெளியாக உள்ளது. 1994 ஆம் ஆண்டு வெளியான ஃபாரெஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்குதான் லால் சிங் சத்தா. இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூரும், அம்மாவாக மோனா சிங் நடித்திருக்கிறார்.

இத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் படுபிஸியாக இருக்கும் அமீர்கான், அப்படத்திலிருந்து ரொமான்ஸ் பாடல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பேசினார். அப்போது, தனது முதல் காதல் அனுபவம் குறித்த ரகசியத்தை பகிர்ந்தார். அப்போது எனக்கு 10 வயது இருக்கும், நான் டென்னிஸ் விளையாடிக் கொண்டு இருந்தேன்.

அப்போது அந்த பெண்ணும் என்னுடன் விளையாடுவார். இதையடுத்து, அந்த பெண் சில நாட்களாக டென்னிஸ் விளையாட வரவில்லை. விசாரித்த போது அவர் வீட்டை காலிசெய்துகொண்டு வேறு ஊருக்கு சென்றதாக சொன்னார்கள். மனசு அப்படியே உடைந்து விட்டது. நான் மிகவும் மனமுடைந்து போனேன். இதில் என்ன சிறப்பு என்றால், நான் அவரைக் காதலித்தேன் என்பதே அவருக்குத் தெரியாது. அந்தக் காதல் நிறைவேறியிருந்தால் நான் நல்ல டென்னிஸ் விளையாட்டு வீரனாகி இருப்பேன் எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement