• Jun 26 2024

தமன்னாவா- உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்லை- பொது மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தினைக் கூறிய நடிகர் ராதாரவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் ராதா ரவி. இவர் தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் கனல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது , பொம்பளைங்க என்னை கண்டபடி திட்டணும், அப்பத்தான் எனக்கு துட்டு ஏறும் என சினிமாவில் தான் எப்படிப்பட்ட வில்லனாக வலம் வந்தேன் என்பது குறித்து பேசினார். உடனடியாக இதையெல்லாம் பேசினால், யூடியூபில் டைட்டில் போட்டு டிரெண்டாக்க மாட்டார்கள் என்றும் கூற அரங்கமே அதிர்ந்தது.

மேலும் நடிகை தமன்னா பற்றி அவர் பேசியதற்கும், வெள்ளை மற்றும் கருப்பு நிற பாகுபாட்டை ஊக்குவிக்கும் அளவுக்கு ராதா ரவி பேசியதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கனல் படத்தின் ஹீரோயினை பாராட்டி பேச நினைத்த ராதா ரவி, "அதுயாரு . தமன்னாவா.. உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்லை.. சுத்தி சுத்தி நானும் பார்த்துட்டேன் கொஞ்சம் கூட கருப்பே இல்லை.. அதே போலத்தான் கனல் பட ஹீரோயினும் செகப்பா அழகா இருக்காரு, கிளாமராத்தான் நடிக்கப் போறாருன்னு நினைச்சேன், ஆனால், படத்தை பார்த்ததும் நடிப்பிலும் அசத்தி உள்ளார் என ராதா ரவி பேசி உள்ளார்.

கருப்பா இருப்பவர்கள் எல்லாம் அழகானவர்கள் கிடையாதா? என்கிற கேள்வியுடன் சமூக ஆர்வலர் பலர் ராதா ரவிக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், நடிகை தமன்னா பற்றியும் ராதா ரவி பேசி டோன் கொச்சையாக இருப்பதாகவும் ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement