• Jun 07 2026

மொழி தெரியாதுன்னு ஒதுங்க மாட்டேன்.. கொஞ்சம் டைம் கொடுங்க.! நடிகை கயாடு லோகர் ஓபன்டாக்

shali / 2 months ago

Advertisement

Listen News!

`பள்ளிச்சட்டம்பி` திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை கயாடு லோஹர் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பல மொழிகளில் நடித்து வரும் அவர், மொழி குறித்த தனது அர்ப்பணிப்பை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.


அவர் கூறியதாவது, “நான் தென்னிந்தியாவை சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் பல மொழிகளில் நடித்து வருகிறேன். ஒவ்வொரு மொழியிலும் நடிக்கும் போது, அந்த மொழியை பேசுவது தான் முக்கியம். அதனால், நான் நடிக்கும் ஒவ்வொரு மொழியையும் கற்க 100 சதவீத முயற்சியையும் செலுத்துகிறேன். எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தாருங்கள். அடுத்த முறை வரும் போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை நன்றாக பேசுவேன்.” என அவர் தெரிவித்தார்.

இந்த நேர்மையான அணுகுமுறை ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு நடிகையாக தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்தப் படம் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டொவினோ தோமஸ் நடித்துள்ள புதிய படமாகும். இதில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

`பள்ளிச்சட்டம்பி` திரைப்படம் ஏப்ரல் 09ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் மற்றும் கயாடு லோஹரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement