• Sep 08 2024

“கைல துப்பாக்கி இருந்தா அங்கேயே அவங்கள சுட்டுவிடுவேன்” – கொந்தளித்த சோனியா அகர்வால்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்டவர் தான் நடிகை சோனியா அகர்வால்.

இவர் முன்னணி நடிகராக இருந்த போதே பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆரம்பத்தில் பெற்றோர் சம்மதத்துடன், அழகாக துவங்கிய இவர்களது காதல் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்க வில்லை. 3 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது.

எனினும் திருமணத்திற்கு பின் படவாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் சோனியா அகர்வால்.கடந்த வருடம் சோனியா அகர்வால் நடிப்பில் ரெட் என்ற தெலுங்கு படம் வெளியாகி இருந்தது. இந்த வருடம் கைபக்கா (மலையாளம்), பகீரா, வார்ட் 126, காதலை தேடி நித்யா நந்தா, sshhh, Grandma போன்ற படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது சோனியா சோனியா அகர்வால் நடித்திருக்கும் படம் கிராண்மா.இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கி இருக்கிறார், இந்த படத்தில் விமலா ராமன், ஷர்மிளா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது. வரும் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா அகர்வாலிடம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

மேலும் அதற்கு சோனியா அகர்வால் கூறியிருந்தது, அத்தகைய செய்திகளை பார்க்கையில் நான் ரொம்பவும் எமோஷனல் ஆகிவிடுவேன். உலகம் எங்கே போகிறது என்பதை பார்க்கும்போது ரொம்பவும் வருத்தமாக உள்ளது. நம் எல்லோருக்குமே குழந்தை உள்ளது. எனக்கு குழந்தை இல்லாவிட்டாலும் கூட என்னுடைய குடும்பத்தில் குழந்தைகள் உள்ளனர். மேலும் எப்படி குழந்தைகளுக்கு எதிராக இப்படிப் யோசிக்கிறார்கள், இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே புரியவில்லை. என் கையில் துப்பாக்கி மட்டும் இருந்தால் அங்கே அவர்களை சுட்டு விடுவேன். அதே நேரத்தில் சட்டத்தை மீறி நாம் செயல்பட முடியாது என்று தெரிவித்து இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement