• Mar 03 2025

" dragon படத்தை பார்த்து எனக்கு கண்ணீர் வந்துவிட்டது..! " இயக்குநர் ஷங்கர் புகழ்ச்சி..

Mathumitha / 19 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். "டிராகன் ஒரு அழகான படம். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு Hats Off. படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்திருக்கின்றனர்," என அவர் தெரிவித்தார்.


மேலும், டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் காட்டிய நடிப்பு குறித்து அவர் கூறினார் "பிரதீப் ரங்கநாதன் மீண்டும் நமக்கு நிரூபித்திருக்கிறார் தனது அற்புதமான Entertainer குணத்தை. மிஷ்கின், அனுபமா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் அவர்களது பெர்ஃபார்மன்ஸும் நமது இதயத்தில் நிற்கின்றன."


மேலும் அவர் "படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது" என மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார். படம் வெளியாகி 3 நாட்களில் படம் 100 கோடியை நெருங்கியுள்ளதுடன் ரசிகர்கள் மாத்திரமின்றி சினிமா பிரபலங்களும் படத்திற்கு சிறந்த வரவேற்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement