சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'குட் பேட் அக்லி' திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகர் AK அணிந்திருந்த ஒரு உடை பற்றிய தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியான தருணத்திலிருந்தே, AK நடித்துள்ள கதாபாத்திரம் மற்றும் அவரது தோற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக, டீசரில் அவர் அணிந்திருந்த ஒவ்வொரு உடையும் தனித்துவமான ஸ்டைல் கொண்டிருந்தது. அந்த வகையில், குறிப்பிட்ட ஒரு சீனின் போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிற உடை பற்றிய விவரம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தகவலின்படி, நடிகர் AK அணிந்திருந்த அந்த உடையின் விலை சுமார் ரூ.1,80,000 என்று குறிப்பிடப்படுகிறது. இது ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகத்திலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த உடையின் தயாரிப்பு, வடிவமைப்பு மற்றும் தனித்துவம் குறித்து ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் காஸ்ட்யூம் பிரபலமான ஒரு டிசைனர் குழுவினால் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறப்பு ஆடைகளை தயாரிக்கும் இந்தக் குழு, ‘ 'குட் பேட் அக்லி' படத்திற்காக கதையின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு காஸ்ட்யூம்களை வடிவமைத்துள்ளனர்.
சாதாரணமாக ஹாலிவுட் மற்றும் கோலிவுட் திரைப்படங்களில் அதிகபட்சமாக இந்த அளவிலான செலவீனத்துடன் உடைகள் உருவாக்கப்படுவது அதிகம் பார்க்க முடியாது. ஆனால், 'குட் பேட் அக்லி ' படக்குழு கதையின் முக்கியத்துவத்திற்கேற்ப உயர்தர ஆடைகளை தேர்வு செய்துள்ளது என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
Listen News!