• Sep 25 2023

அந்த சீனை எடுப்பதற்காக மூன்று நாள் படாதபாடுபட்டேன்- குஷி பட இடுப்பு சீனின் ரகசியத்தை பகிர்ந்த S.J Surya

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா.இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் ஜோதிகாவை குஷி என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வழக்கமான காதல் கதையைக் கொண்டதாக இருந்தாலும் படம் வேற லெவலில் வெற்றி பெற்றது.

இதற்கு காரணம் இப்படத்தில் வைக்கப்பட்டிருந்த சீன்களே காரணம் எனலாம்.அத்தோடு எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய மேக்கிங்கிலும், ஸ்க்ரீன் ப்ளேவிலும் படத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.எஸ்.ஜே.சூர்யா எப்போது சீன் பிடிப்பதில் கில்லாடி என்று அவருடன் பணியாற்றியவர்கள் சொல்லியதுண்டு. 


மேலும் குஷி படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த சீன் தான் மொட்டை மாடியில் விஜய்யும், ஜோதிகாவும் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது ஜோவின் இடுப்பை விஜய் பார்ப்பது.அந்த சீனை அவ்வளவு அழகாக பில்ட் அப் செய்து இருவருக்குள்ளும் பிரிவை ஏற்படுத்தியிருப்பார். இந்த சீனை இன்று வரை ரசிகர்கள் ரசிப்பதும் உண்டு.


இந்நிலையில் அந்த சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவர் அளித்த பேட்டியில், "குஷி படத்தில் அந்த இடுப்பு சீனை எடுப்பதற்காக மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டேன். விமானம் ஒன்று போக வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன். என்னடா இவன் க்ளோஸ் அப் ஷாட் எடுக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொள்கிறானே என திட்டினார்கள். ஆனால் நான் நினைத்தபடிதான் அதை எடுத்தேன். அந்தப் பொறுமையும், உழைப்பும்தான் இன்றுவரை எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது" என்றும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement