• May 03 2024

சிம்புவுக்கு ஒரே ஒரு போன் செய்தேன்…” ஹன்சிகா கூறிய விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் விஜய் ,சூர்யா, கார்த்தி, விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா.

மேலும் இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டேயிருந்த நிலையில் இப்போது சிம்புவின் மாநாடு ரிலிஸ் ஆகி பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் மஹா படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. மேலும் இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஹன்சிகா “இந்த படத்தில் நான் நடிக்க எனது அம்மாதான் முக்கியக் காரணம். அவர்தான் என்னுடைய 50 ஆவது படமாக ‘மஹா’ இருக்கவேண்டும் என சொன்னார். இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு ஒரே ஒரு போன்தான் செய்தேன். உடனே நடிக்க சம்மதித்துவிட்டார். நண்பன் சிம்புவுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement