• May 18 2024

நானே அவனை புரொமோஷனுக்காக தான் வைத்திருந்தேன்- ராபர்ட் மாஸ்டரின் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்த வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் மகளாக இருந்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தவர் தான் வனிதா. இவருடைய வாழ்க்கையிலும் சரி கெரியரிலும் சரி நல்லதொரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த ஷோ தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதனால் தான் வனிதா விஜய் டிவியை தனது தாய் வீடு என்று கூறுகின்றார்.

உறவினர்களால் கைவிடப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாய்ப்பு கொடுத்தது மட்டும் இன்றி, குக் வித் கோமாளி, காமெடி நிகழ்ச்சியின் நடுவர், பிக்பாஸ் ஜோடிகள் வாய்ப்பு என அடுத்தடுத்து விஜய் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுத்தது.இதனைத் தொடர்ந்து படங்களிலும் நடிக்கும் வாய்பினைப் பெற்று வருகின்றார்.


ஓய்வு நாட்களில் நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள வனிதா, தாய்லாந்தில் இருந்து தாய்நாட்டிற்கு வந்து இறங்கியதுமே... ஏர்போர்ட்டில் இருந்து பிக்பாஸ் பற்றி இன்டர்வியூ கொடுத்துள்ளார்.

அப்போது அவர் நிகழ்ச்சியை தன்னால் சரியாக பார்க்க முடியவில்லை எனவே பார்த்ததை வைத்து சொல்கிறேன் என கூறி அனைத்து போட்டியாளர்கள் குறித்தும் பேசியுள்ளார். குறிப்பாக தனலட்சுமி ஜிபி முத்துவிடம் கடுமையாக நடந்து கொண்டது, மகேஸ்வரியிடம் சண்டை போட்டது போன்றவற்றை குறிப்பிட்டு, மகேஸ்வரி சாதாரணமாக தான் பேசினார் ஆனால் அதனை பெரிய பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே தனலக்ஷ்மி இப்படி பேசினார் என கூறினார்.

அப்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, நானே அவனை... புரொமோஷனுக்காக தான் வைத்திருந்தேன். மற்றபடி எதுவும் இல்லை. ஆனால் நான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது நான் டார்ச்சர் பண்ணுனேன் என பல பேட்டிகள் அவர் கொடுத்ததாக கேள்வி பட்டேன் என கூறினார்.


 ரக்ஷிதாவுக்கு ராபர்ட் மாஸ்டர் ரூட் போடுவது போல் தெரிகிறதே என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவருக்கு 2007 ஆம் ஆண்டு திருமணம் ஆனதாக சொன்னார். ஒரு குழந்தை வேற இருக்கிறதாம் ஆனால் அந்த மனைவி யார் குழந்தை யார் என தெரியவிலை. இந்த திருமணத்திற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட திருமணம் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுவரை ராபர்ட் மாஸ்டர் பற்றி யாருக்கும் தெரியாத சில தகவல்களை மட்டுமே இதில் கூறியுள்ள வனிதா... விரைவில் விலாவாரியாக கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Advertisement

Advertisement