• May 19 2024

திருமணம் வேண்டாம் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது- வருங்காலம் பற்றி கூறிய தமன்னா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் தமன்னா. இவர்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பலமொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக உடல் எடை அதிகரித்ததாலும் தமிழில் ஒழுங்கான படவாய்ப்பு அமையாததாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.

இதுதவிர ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் தற்போது பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறேன். ஒரு நாளில் 24 மணி நேரமும் தான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். 

அதனால் திருமணம் குறித்து யோசிக்கக்கூட நேரமில்லை. ஆனால் எனது குடும்பத்தினர் திருமணத்திற்காக என்னை வலியுறுத்திகிறார்கள் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், திருமணம் வேண்டாம் என்றால் விருப்பம் இல்லை என்று அர்த்தமில்லை. விரைவில் திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளதாகவும், எனக்கு பிடித்தமான நடிப்பை நேசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement