• May 11 2024

தேசிய விருது இயக்குநரின் படத்தில் கதாநாயகனாகும் சிம்புவுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்- சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகள் பல தொல்விகள் பல சவால்கள் என்பவற்றைக் கடந்து முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாக மாநாடு ,வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

மேலும் இப்போது பத்து தல என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இவருடன் நடிகர் கௌம் கார்த்தியும் நடிக்கின்றார். இதனை அடுத்து சிம்பு அடுத்ததாக யாருடைய படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகம் காணப்பட்டது.


அந்த வகையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. 

அதன்படி கே.ஜி.எப் திரைப்படங்களை தயாரித்த Hombale Films நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பானது 2023ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பமாகும் என்றும் கூறப்பட்டு வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement