• May 04 2024

அப்படி என்னால் வாழ முடியவில்லை.. நான் யோசித்து தான் செய்தேன்.. முதன் முறையாக மனம் திறந்த நடிகை அபிராமி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை அபிராமி 'வானவில்' என்ற படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின்' போன்ற பல படங்களில் நடித்த ஹிட் கொடுத்தார்.


இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் இணைந்து இவர் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படம் இவருக்கு வேற லெவல் பெயரை பெற்றுத் தந்தது. இதன் பின் இவர் இடையில் ஒரு 10 வருடம் திடீரென சினிமா பக்கமே காணவில்லை. இருப்பினும் அதன்பிறகு மீண்டும் நடிக்க வந்து இப்போது பல மொழிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அதுகுறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அபிராமி. அதாவது "10 வருடம் சினிமாவில் இருந்து விலகியபோது என்னுடைய வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வாய்ப்பு கிடைத்தது. 15வது வயதில் நடிக்க வந்தேன், பள்ளி படிப்பை கூட நான் சரியாக முடிக்கவில்லை, 21 வயது வரை நான் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன், ஒரு சராசரி பெண்ணாக என்னால் வாழ முடியவில்லை" என ஓப்பனாக கூறியுள்ளார்.


மேலும் "அந்த இடைவேளையை நான் யோசித்து தான் செய்தேன், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" எனவும் தெரிவித்துள்ளார் அபிராமி. 

Advertisement

Advertisement

Advertisement