• Apr 27 2024

நானும் இணைந்தேன், தளபதி67-ல்- பிரபல இயக்குநரின் வைரல் பதிவு.!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தளபதி 67. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. 

அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குநராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.



த்ரிஷா, ப்ரியா ஆனந்த், இயக்குநர் மிஷ்கின் மற்றும் பலர் இணைந்துள்ள இப்படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இதனிடையே இப்படத்தின் நடிகர் மன்சூர் அலிகான் இணைவதாகவும் அதிகாரப்பூர்வ போஸ்டருடன் கூடிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை பகிர்ந்துள்ள இயக்குநர் ரத்னகுமார், “சக்கு சக்கு வத்திகுச்சி ” என குறிப்பிட்டு மன்சூர் அலிகானுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். 


இதேபோல் மன்சூர் அலிகான் இணையும் அறிவிப்பு போஸ்டரில், “நானும் இணைந்தேன், தளபதி67-ல்.. லோகேஷ் நீ ஆர்பரித்தெழு.. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என குறிப்பிடப்பட்டுள்ளது.




Advertisement

Advertisement

Advertisement