• Mar 27 2023

பள்ளிப் பருவத்தில் நடிகர் அதர்வாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- யாருடன் நிற்கிறார் என்று பாருங்க

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர்களில் முக்கியமானவர் தான் முரளி.இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

மேலும் இவருடைய மகனான அதர்வா தமிழில் பாணாக்காத்தாடி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து இவர் சில திரைப்படங்களில் நடித்தாலும், இயக்குநர் பாலா இயக்கத்தில் 2013 -ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.


கடந்த ஆண்டில் இவர் நடிப்பில் ட்ரிக்கர், குருதி ஆட்டம், பட்டத்து அரசன் போன்ற படங்கள் வெளியானது. ஆனால் மூன்று படத்திற்கும் ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.


சமீபகாலமாக பல சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதர்வா அவரின் அம்மா, அப்பா உடன் சேர்ந்து சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் முரளிக்கு அதர்வாவைத் தவிர இன்னுமொரு மகன் இருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.




Advertisement

Advertisement

Advertisement