• Apr 16 2024

மறைந்த நடிகர் விசுவின் மகள்களைப் பார்த்திருக்கின்றீர்களா?- இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் இயக்குநர்,மற்றும்  தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவராக வலம் வந்த நடிகர் தான் விசு.1945 ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் எம் ஆர் விஸ்வநாதன் ஆகும். இவர் முதன் முதலில் இயக்குநர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குநராக பணிபுரிந்தார்.

இவரது நடிப்பில் வெளியான சம்சாரம் மற்றும் மின்சாரம் என்னும் திரைப்படம் தான் இது நாள் வரைக்கும் எந்த ஒரு மக்களுமே மறந்திருக்க முடியாத திரைப்படம் எனலாம்.மேலும் இவர் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.இது தவிர சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கின்றார்.


வயது முதிர்ச்சி காரணமாக விசு கடந்த சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்ததாலும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.தனது சொந்த அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு ஆதரவளித்து வந்தார். சன் டிவியில் அரட்டை அரங்கம் மற்றும் ஜெயா டிவியில் விசுவின் மக்கள் அரங்கம் என தொலைக்காட்சியில் நேரடி விவாதங்களை தொகுத்து வழங்குவதில் அவர் பிரபலமானார்.அவர் பாஜகவில் இணைந்து பிரச்சாரம் செய்தார். அத்தோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் தான் இறப்புக்குள்ளானர்.


மேலும் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மற்றும் சுமார் 25 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.விசு கடந்த 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு லாவண்யா, சங்கீதா , கல்பனா என்று மூன்று மகள்கள் , இவர்கள் மூவருமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்கள்.இவர்களின் புகைப்படங்கள் தான் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement