• Apr 26 2024

நான் வேலை செய்யிற மாதிரி நடிச்சிட்டு வாறேன்- குயின்சி கூறிய வார்த்தையால் கடுப்பான மைனா நந்தினி

stella / 1 year ago

Advertisement

Listen News!


புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்கிறார்கள். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நிறைய வழக்குகள் பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சூழலில் போட்டியாளராக இருக்கும் குயின்சி, சக போட்டியாளர்களிடம் பேசியது தொடர்பான விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


சமீபத்திய எப்பிசோடுகளில் குயின்சி சற்று ஆக்டிவாக இல்லை என்ற விமர்சனமும் பரவலாக இருந்து வரும் நிலையில், சில விஷயங்களை குயின்சியே சக போட்டியாளர்களிடம் பேசியுள்ளார்.

அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், மைனா நந்தினி, மணிகண்டா உள்ளிட்டோர் அமர்ந்திருக்க குயின்சி குண்டு வைத்ததாக அமுதவாணன் தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து பேசும் குயின்சி, தனது கையை மைனாவிடம் காட்டியபடி, "இங்க பாரு. என் கை எல்லாம் Tight ஆயிடுச்சு, வேலையே செய்யாம" என சிரித்துக் கொண்டே குறிப்பிடுகிறார்.


மற்றவர்களும் "இப்ப தெரியுதா வேலை செய்யலங்குறது" என்றும் தெரிவிக்கின்றனர். இதே போல மற்றொரு சமயத்தில், மணிகண்டா, மைனா நந்தினி காலில் கட்டுப் போட்டுக் கொண்டிருக்க அந்த சமயத்தில் அவர்களிடம் பேசும் குயின்சி, "நான் போய் அட்லீஸ்ட் வேலை செய்யற மாதிரி பண்றேன்" என கூறிவிட்டு கிளம்பி செல்கிறார். இதனை கேட்டதும் ஒரு நிமிடம் திகைத்து போகும் மைனா, "வேலை செய்யுற மாதிரி பண்றியா?. குயின்சி நீ வேலை செய்யணும்" என்கிறார்.

தான் வேலை செய்யவில்லை என வெளிப்படையாக குயின்சி கூறும் விஷயம்  தற்பொழுது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement