• Sep 03 2025

"எனக்குள் இருக்கும் குழந்தைக்காகவே நடிக்கிறேன்"..!தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா...!

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நடிகர் தேஜா சஜ்ஜா, அவரது புதிய திரைப்படமான "மிராய்"யைப் பற்றி பேசும் போது தனது திரைப்பட தேர்வுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.


"எனக்குள் இருக்கும் குழந்தைக்காகவே ஃபேண்டஸி படங்களை தேர்வு செய்கிறேன். குழந்தைகளும், இளம் ரசிகர்களும் ரசிக்கக்கூடிய கதைகள் மீது எனக்கு தனி விருப்பம் உண்டு." எனத் தெரிவித்த அவர், ஃபேண்டஸி, அதிசய, ஆக்‌ஷன் வகை படங்கள் தான் தன்னை அதிகம் கவரும் என கூறியுள்ளார்.

"மிராய்" திரைப்படம் ஜப்பானிய அனிமேஷனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த படம். இது தெலுங்கில் உருவாகி இருக்கும் போதிலும், தமிழிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.


தமிழ் சினிமா குறித்து அவர் கூறும்போது, "லோகேஷ் கனகராஜ், அஸ்வத் மாரிமுத்து போன்ற திறமையான இயக்குநர்களுடன் நேரடி தமிழ் திரைப்படம் செய்யும் ஆசை எனக்கு பலமாக உள்ளது. தமிழ் சினிமாவிடம் எனக்கு பெரிய ஈர்ப்பு உண்டு" என்றார்.

தேஜா சஜ்ஜா நடித்த "மிராய்" திரைப்படம் சினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்றதாகவும், குடும்பத்தோடு பார்ப்பதற்கேற்றதாகவும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement